வெளிநாடுகளின் சுற்றுலாவிகளுக்கு மே மாதம் தொடக்கம் நுழைவிசைவு இலவசம்!

மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.
பரீட்சார்த்தமாக, ஆறுமாதங்களுக்கு இந்தத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்தறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இந்த வசதியைப்பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நுழைவிசைக்கட்டணமின்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறுமாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் வெற்றியைப்பொறுத்து, இதனை நீடிப்பதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
Related posts:
அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் - அமைச்சர் ராஜித !
அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வ...
|
|