2,753 உளவியல் ஆசிரியர்களை சேவையில் இணைக்கத் திட்டம்!

Thursday, January 26th, 2017

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்குப் புதிதாக 2,753 ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார் உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளும் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் இதன் காரணமாக இவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் சிறந்த தொடர்பாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காகப் புதிதாக 2,753 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவ்வாறான பாடசாலைகள் 3,768 காணப்படுகின்றன. தற்போது 1,039 உளவியல் ஆசிரியர் சேவையில் தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உரிய பயிற்சிகளைப் பெற்ற பின்னர், உளவியல் ஆலோசகர்களாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Akila-Viraj-Kariyawasam

Related posts: