மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நேற்றையதினம் 409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில், 401 பேர் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் 8 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்ததிருந்தார்.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதுடன் 24 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: