வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு – இலங்கை மத்திய வங்கி!
Friday, October 18th, 2019
கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை 24.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
Related posts:
நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!
கடும் வறட்சி - வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!
சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|
|


