நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!

Monday, September 18th, 2017

நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒட்டுமொத்த அமைச்சரவை எதிர்ப்புக்குரல் கொடுத்து அதனை நிராகரித்துள்ளது.

சுத்திகரித்தல் மற்றும் விநியோகம், ஊழியர்களை பராமரித்தல் போன்றவற்றை கருத்திற்கொண்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வார அமைச்சரவையில் குடிநீருக்கான கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.எனினும், அவரது யோசனையை ஒட்டுமொத்த அமைச்சரவையும் எதிர்த்துள்ளது.

தேர்தல்கள் அண்மித்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் குடிநீருக்கான கட்டண அதிகரிப்பு பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீம் தான் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது - தேர்தல் ஆணைக்குழு...
தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் - ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள...