சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் – ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி!

Thursday, August 11th, 2022

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் என குறித்த தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், பொதுமக்களின் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம், ஜீ.எஸ்.பி பிளஸ், மனித உரிமைகள் பேரவை என்பனவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 39 இந்தியமீனவர்கள் யாழில் விடுதலை!
உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
அத்தியாவசிய பொருட்களை சாதாரண விலையில் விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!