வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு – சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை!

Friday, May 5th, 2017

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அதேவேளை, தொற்றுநோய் பரவக் கூடியஏதுநிலைகள் அதிகரித்துக் காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கோண்டாவில் கிழக்கு வாமாஸ் வீதியின் இருமருங்கிலும் கொட்டப்படும் குப்பைகூழங்களால் ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வாழ்ந்தவரும் மக்களும்,பிரயாணிகளும் நாளாந்தம் பெரும் சிரமங்களைஎ திர்கொண்டு வருகின்றனர்.

வீடுகள் வர்த்தக நிலையங்களிலிருந்து அகற்றப்படும் குப்பைகளுடன் விலங்குக் கழிவுகளும் அங்கு இரவோடு இரவாககொண்டுவந்து கொட்டப்படுவதாகவும், இவற்றை விலங்குகள் தமது உணவுக்காககிளறி வீதிகளில் பரவிவருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது விடயத்தில் நடவடிக்கையெடுக்குமாறு உரியவர்களிடம் பலமுறை தெரியப்படுத்தியருந்த போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெங்கு போன்றதொற்று நோய்கள் மக்களை தாக்கிவரும் இன்றைய சூழலில் வீதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் சூழல் மாசடையும் அதேவேளை, இதனைத் தடுத்து நிறுத்தி எமது சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: