வடக்கு கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிபர்கள் பற்றாக்குறை!

Tuesday, May 1st, 2018

வடக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிபர்களுக்கான விண்ணப்பம் கோரப்படும்போது விண்ணப்பிக்க எவரும் முன்வருவதில்லை என்று கல்விச் சமூகம் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர், அதிபர் வெற்றிடங்கள் மாகாண கல்வி அமைச்சால் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கஸ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும்போது எவரும் விண்ணப்பிக்க முன்வருவதில்லை. கிராமப்புற பாடசாலைகள் இதற்கு முகம்கொடுத்து பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகிவருகின்றன.

பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும்போது பிள்ளைகளுக்கான கல்வியை வழங்குவதற்கு பெற்றோர்கள் நகர் புறத்தை நோக்கி நகர்கின்றனர்.

கிராம மட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி மட்டம் குறைந்து செல்கின்றது. கடமை நிறைவேற்று அதிபர்கள் இவ்வாறு கஸ்டப் பிரதேசங்களில் அதிகம் கடமை புரிகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: