வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை – யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்!

யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர் மீது செயலக வாசலில் வைத்து வாள்வெட்டு!
ஒரு இலட்சம் சாரதிகள் கைது!
|
|