அஞ்சல் அலுவலகங்களின் சேவை குறித்து கணக்கெடுப்பு!

Monday, January 9th, 2017

நாடளாவிய ரீதியில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தான கணக்கெடுப்பொன்றை அஞ்சல் திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன் அதற்கான கேள்விக் கொத்தையும் விநியோகித்து வருகிறது.

220 வருட பாரம்பரியத்தைக் கொண்ட அஞ்சல் சேவை மூலம் வழங்கப்படும் அதிவேக அஞ்சல் சேவை, ரெலிமெயில் சேவை, முத்திரை, காப்புறுதி, பயன்பாட்டு கட்டணங்கள் உள்ளிட்ட 14 சேவைகளை அஞ்சல் திணைக்களம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இச் சேவையை மேலும் வலுவுள்ளதாக்குவது தொடர்பாக மக்களின் ஆலோசனையும் தபால் மா அதிபதி ரோஹண அபயரட்ண கோரியுள்ளார். நாடாளவிய ரீதியில் தபால் திணைக்களம், பிரதான தபால் நிலையம், உப தபால் நிலையம், முகவர் தபால் நிலையம் எனும் வலையமைப்பைக் கொண்டு பொது மக்களுக்கான சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

MxYqnom

Related posts: