விவசாயிகள் நீரைச்சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசனப் பொறியியலாளர் கோரிக்கை!

Friday, February 10th, 2017

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயிகள் நீரைச்சிக்கனமாக பயன்படுத்துமாறு வவுனிக்குள நீர்ப்பாசனப் பொறியியலாளர் பாக்கிராஜா விகர்னன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் தற்போது ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக 24 அடி கொண்ட வவுனிக்குளத்தின் நீர் மட்டம் தற்போது 7 அடியாகவுள்ளது. இந்நிலையில் குளத்தின் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயச் செய்கைகளைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு வவுனிக்குள பொறியியலாளர் பா.விகர்னன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து பயிர்செய்கை நிலங்களுக்காக நீர் விநியோகங்களை மேற்கொள்ளுவதற்கு இடது வலதுகரை மத்திய பகுதிகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளும் குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நீர் விநியோக வாய்க்கால்கள் குளத்தின் உட்பகுதி பைக்கோ இயந்திரம் கொண்டு நேற்று (08) அகற்றப்பட்டது. இவ்வாறு அகற்றப்படுவதனால் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கும் இரண்டு தடவைகள் நீர் விநியோகம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ag

Related posts: