இலங்கையிலும் கொரோனா தொற்றின் உயிரிழப்பு 200 ஐ கடந்தது –

Friday, January 1st, 2021

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, டர்கா டவுனைச் சேர்ந்த 72 வயது ஆணொருவர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவர் களுத்துறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் மரணத்திற்கான காரணம் இரத்த விஷம், கடுமையான நீரிழிவு மற்றும் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இவர், அம்பன்பொல ஆதார மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இவரது இறப்புக்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுடன் நுரையீரல் தொற்று என கூறப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு-05 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் கே.டி.யூ. மருத்துவமனையில் இருந்து ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இவரது இறப்புக்கு கல்லீரல் தொற்று மற்றும் கொரோனா தொற்று நிமோனியா காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கலேவெல பகுதியைச் சேர்ந்த 46 வயது ஆணொருவர் கலேவெல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 30ஆம் திகதி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு மற்றும் கொரோனா தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவர், இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் இவரது மரணத்திற்கான காரணம் இரத்த விசம், கொரோனா வைரஸ் நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 204ஆக அதிகரித்துள்ளது.

Related posts:


ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...
சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர...