விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதமர் விளையாட்டு நிதியம்!

விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு முதற்தடவையாக பிரதமர் விளையாட்டு நிதியம் ஒன்று 50 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக அரச மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நகரத்திற்கு மாத்திரம் வரையறுக்காமல் கிராமிய மட்டங்களிலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாட்டின் வீர வீராங்கனைகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்வது இந்த விளையாட்டு நிதியத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Related posts:
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
சாரதியின் அசமந்த போக்கு - மாங்குளம் - பனிச்சம்குளம் பகுதியில் கோர விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் முன்னெடுப்பு - பட்டம் பறக்கவிடுவதைத் தவ...
|
|