விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர் உற்பத்திகளையாவது குறைந்த விலையில் வியாபாரகள் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்து!

Thursday, August 24th, 2023

யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள்

குறிப்பாக வெக்கைகாலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க  வருவார்கள் தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

ஏனென்றால் அதிக அளவில் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது எனகவலை வெளியிட்டுள்ளனர்

குறிப்பாக யாழ்ப்பாண குடா நாட்டில் வெக்கை காலத்தில் பழங்கள் இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும்.

எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழம் இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை உள்ளூரில் உற்பத்தியாகும் பழங்களை கூட பழ வியாபாரிகள் நிறுத்தல் அளவில் விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டும் உள்ளூர் நுகர்வோர் சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி பழ வியாபாரிகள் மேற்கொள்ளும் இத்தகைய அதிகளவான விலை உயர்வு மற்றும் நிறுத்தல் அளவு போன்றவற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளாலும் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக பழ வியாபாரிகள் மீது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை உள்ளூர் நுகர்வோர் இவ்வாறான செயற்பாடுகளை குறித்த தரப்பினர் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: