விரைவு தபால் சேவைகளை பரவலாக்க புதிய திட்டம் – யாழ்ப்பாண தலைமை தபாலகம்!

Friday, October 26th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் விரைவு தபால் சேவைகளை மேலும் துரிதமாக முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண தலைமை தபாலகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் கோப்பாய், வட்டுக்கோட்டை, கொக்குவில், ஆகிய மூன்று தபாலகங்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. மிக விரைவு தபால் சேவைகளில் மக்கள் அதிக நாட்டம் கொண்டிருப்பதால் விரைவ தபால் சேவையை படிப்படியாக பரவலாக்கம் செய்ய யாழ் தலைமை தபாலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை அளவெட்டிப் பகுதியில் புதிய தபாலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அஞ்சல்மா அதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார் இன்று தபால் சேவையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்களுக்கு ஆத்மார்த்தமான சேவையை தபாலகங்களே வழங்குகின்றன. மக்கள் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை தபாலகங்கள் மூலமாகவே மேற்கொள்கின்றனர் என்றார்.

Related posts:


இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பள...
அதிகாரிகளை ஒன்றிணைத்து கடமைகளை நிறைவேற்றுங்கள் - பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இராஜாங்க அமைச்...
“யுக்திய” நடவடிக்கை இன்றுமுதல் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ட பல இடங்களிலும் முன்னெடுப்பு!