மழையுடனான வானிலை – தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, October 9th, 2023

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் கலந்துள்ளதால், கொதித்தாரிய நீரை அருந்துவது மிகவும் ஏற்றது என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்  கலாநிதி  ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்

இதேவேளை, இடைதங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இடையே சின்னம்மை, கண் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனையை பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளமை கறிப்பிடத்தக்கது

இதனிடையே நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 13 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 125 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: