அதிகாரிகளை ஒன்றிணைத்து கடமைகளை நிறைவேற்றுங்கள் – பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, September 11th, 2020

பொதுவான கொள்கையின் அடிப்படையில் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எமது கடமையாகும். அதிகாரிகளை ஒன்றிணைத்து உங்களது கடமைகளை நிறைவேற்றுங்கள் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இராஜாங்க அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் செயற்திட்டம் ஒன்றுடன் எதிர்கால வேலைகளை செய்ய வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி ஒவ்வொரு வருடமும் நிறைவேற்ற முடியுமான அளவை கணித்து 5 வருடங்களுக்கான திட்டத்தை தயாரிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இலகுவாக ஆரம்பிப்பதன் மூலம் காலம் செல்லும்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் இலகுவான இடத்தில் இருந்து ஆரம்பிக்கவும். 2005 இல் நாம் பதவிக்கு வரும்போது வெளியில் நடமாட முடியாது. எல்லா இடங்களிலும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. அன்று எனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 100 யார்களுக்குள் மூன்று குப்பை குவியல்கள் இருந்தன. குப்பைகளை அகற்றுவது மிக இலகுவான விடயம். அனைத்து அமைச்சுக்களுக்கும் இலகுவான வேலைகளிலிருந்து நீண்ட பயணம் ஒன்றை செல்ல முடியும்’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையை இன்னும் மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜாங்க, அமைச்சுக்களின் கட்டமைப்பு பல வருடங்களாக இனங்காணப்பட்டு வந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘சரி சேர் அனைத்தும் சரி என்று அதிகாரிகள் கூறலாம். அத்திட்டங்கள் ஆவணங்களிலேயே இருக்கும் திட்டங்கள். ஆவணங்களில் இருந்து பயன் இல்லை. அவற்றை செயற்படுத்த வேண்டும். அதுதான் இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Related posts: