விரைவில் மாகாண சபை தேர்தல் – தயராகுமாறு பசில் ராஜபக்ச அறிவிப்பு!
Monday, June 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்றும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே பொருளாதாரத்திற்கு பாதிப்பு என குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


