விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த சட்டமா அதிபரிடம் ஆலோசனை!
Thursday, September 23rd, 2021
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டரீதியிலாக உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள், வழிகள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.
அதன்படி நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் சில தினங்களில் சட்டமா அதிபரின் பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் - சபாநாயகர் மஹிந...
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...
|
|
|


