விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!
Saturday, August 29th, 2020
மருந்து வகைகள் சிலவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதசாரிகள் கடவையை மாற்றியமைக்க நடவடிக்கை!
அம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் சில்லு சறுக்கி விழுந்ததில் முதியவர்...
வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெ...
|
|
|


