பாதசாரிகள் கடவையை மாற்றியமைக்க நடவடிக்கை!
Friday, November 4th, 2016
யாழ்ப்பாணத்தில் வீதிச் சமிஞ்சைகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரிகள் இலகுவாகக்கடக்கக் கூடியவாறு பாதசாரிகள் கடவைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதிச் சமிஞ்சைகளுக்கு ஏற்ற வகையில் வீதியைக் கடக்கும் பாதசாரிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதை நிவர்த்தி செய்யும் வகையிலேயே பாதசாரிக்கடவைகள் திருத்தியமைக்கப்படவுள்ளன.
வீதிச் சமிஞ்சை பொருத்தப்பட்டுள்ள வேம்படிச் சந்தியில் உள்ள பாதசாரிக்கடவை வீதிச் சமிஞ்சை ஒழுங்குகளுக்கு ஏற்றதாக அமைக்கப்படவில்லை. அது திருத்தியமைக்கப்படுகின்றது. ஏனைய வீதிச் சமிஞ்சை உள்ள வீதிகளில் உள்ள பாதசாரிக்கடவைகளும் திருத்தி அமைக்கப்படவுள்ளன. இதனால் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts:
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய...
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது - அமைச்சர் காமினி லொ...
அதிகமான வெப்பநிலை - பொதுமக்களிடையே ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை !
|
|
|


