விரைவில் எரிபொருள் விலை தொடர்பான உடன்பாடு!
Thursday, September 15th, 2016
எரிபொருள் விலை உடன்பாடு குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் விலை சமன்பாட்டை அறிமுகம் செய்வது எதிர்ப்பார்ப்பாகும் என அவர் கூறினார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எண்ணெய் குழாக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்குரிய கேள்விப் பத்திரங்களும் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts:
ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்பு - கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப...
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு நோய் க...
|
|
|


