விமானப் பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்!

Saturday, May 27th, 2017

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பயணம் செய்யும் விமானப்பயணிகள்  கைப்பையில் காவிச்செல்லக்கூடிய  பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஒழுங்கு முறைக்கு அமையவே இந்தப் புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜீன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. புதிய நடைமுறைகளின்படி விமானப்பயணிகள் கையில் காவிச் செல்லும் பையில் எடுத்துச் செல்லக்கூடிய திரவப் பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதில் திரவ பொருட்கள் மற்றும் ஜெல் என்பன உள்ளடங்கும்

எல்லா திரவ பொருட்களும், வெளிப்படையான முத்திரையிடப்பட்ட 20 x 20 அளவுடைய பிளாஸ்ரிக் பைகளிலேயே கொண்டு செல்ல வேண்டும் திரவப் பொருட்கள் ஒரு லீற்றரை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு பயணியும் ஒரு பிளாஸ்ரிக் பையை மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் மருத்துவரின் வழிகாட்டலுக்கு ஏற்ப அனுமதிக்கப்படும் மேலும் இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புச் சேவைகள் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது

Related posts: