இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவில் இலங்கை வருகை!

Tuesday, July 5th, 2022

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை அவசர தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்குத் தேவையான பால்மாவை பெருமளவு இறக்குமதி செய்வதற்கும் இந்தியா ஒத்துழைப்புத் தெரிவித்துள்ளது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் பால் உற்பத்தி துறைகளில் அதிக ஒத்துழைப்பை வழங்குவதற்கான விடயங்களை ஆராய இந்திய ஆய்வுக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அமைச்சரின் பணிப்புரையின் கீழ், தற்போதுள்ள பால் தொழில்துறையின் கீழ் பல்வேறு அம்சங்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான தற்போதைய கடன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்ய முடியும் எனவும், இது இலங்கையில் உள்ள குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு பங்களிக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அனைத்து வழிகளிலிருந்தும் பால் மாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: