விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

Wednesday, January 3rd, 2018

யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் துண்டிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஜோசப் அல்பிரட் ரவிராஜ் மற்றும் ஆனந்தராஜா க்ரைன்சன் ஆகியோரது பூதவுடல்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல்கள் வைக்கப்பட்டுள்ள அன்னார்களது இல்லங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய அதேவேளை பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

புதுவருட தினத்தன்று யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் துண்டி சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

Related posts: