பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – ஜனாதிபதி!

Tuesday, October 24th, 2017

2019ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

புலமைப்பரிசிலுக்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஒரு கல்வி வலயத்திற்கு 100 மாணவர்கள் வீதம் இந்தப் புலமைப் பரிசிலை வழங்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு 24 மாதங்களுக்காக 500 ரூபா வீதம் மாதாந்தம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை வங்கியுடன் இணைந்து கல்வி அமைச்சு இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது

Related posts: