விபத்திற்கு உள்ளான உலங்குவானூர்தியின் விமானியை பாராட்டிய ஜனாதிபதி!

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு விமானம் ஊடாக உணவு மற்றும் வேறு அதியவசிய பொருட்களை கொண்டு செல்லும் போது விபத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரை செலுத்திய குறித்த விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கொடவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி ஊடாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பொருட்களுடன் விமானப் படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளானது.இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் 11 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என விமானப் படையின் ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
Related posts:
போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டம் 25,000 ரூபாவாக அதிகரிப்பு!
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை!
|
|