8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, October 31st, 2021

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, நவம்பர் 16 ஆம் திகதிமுதல் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கையில் எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

நாட்டில் இதுவரையில் இரண்டு கட்டங்களின் கீழ், அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களின் வருகையில் முறையான அதிகரிப்பை காண முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்களின் மற்றும் அதிபர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: