வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Sunday, March 20th, 2022
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன.
எனவே அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் தனிநபர் வருமானத்தில் மாற்றம் - மத்திய வங்கி!
கொழும்பில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு - பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
மாநகரசபையின் பொறுப்பில் யாழ்ப்பாணம் கலாசார மையம் கொண்டுவரப்பட வேண்டும் - சபையில் நிறைவேறியது தீர்மா...
|
|
|


