இலங்கையின் தனிநபர் வருமானத்தில் மாற்றம் –  மத்திய வங்கி!

Wednesday, May 3rd, 2017

கடந்த வருடம் இலங்கையில் தனிநபர் வருமானம் 3,885 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 வருடங்களின் பின்னரே இவ்வாறு தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக 2001ஆம் ஆண்டும் தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளது.

அமெரிக்கா டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி இதற்கு பிரதான காரணமாகியுள்ளதென மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரூபாயின் பெறுமதிக்கமைய தனிநபர் ஒருவரின் வருமானம் 2015ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 522.355 ரூபாவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் 558.363 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதுடன், அது நூற்றுக்கு 4.7 வீத அதிகரிப்பாகும். எனினும் சர்வதேச நாடுகளில் தனிநபர் வருமானம் அமெரிக்க டொலரின் பெறுமதிக்கமையவே மதிப்பிடப்படும். அதற்கமைய 2016ஆம் தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts:

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதி!
தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய ...
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்களில் எரிபொருள் - திங்கள்முதல் எரிவாயு...