விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை!
Wednesday, December 6th, 2017
பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகளை குறைக்கும் வகையில் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 15 ஆம் திகதி வரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் மாவட்டங்களில் உள்ள பிரதான வர்த்தக நிலையங்களில் உள்ள களஞ்சியசாலைகள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.அத்துடன் உள்ளடக்கம் தொடர்பிலான தவறான தகவல் விளக்கம் கொண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மேலதிக அரச அதிபராக பதவியேற்பு!
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணிநீக்கம் - சிறைச்சாலை ஆணையாளர் தகவல்!
பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை - தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!
|
|
|


