பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!
Tuesday, December 20th, 2022
யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி – அந்தோணிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் அதே பகுதியில் வசிக்கும் 56 அகவையுடைவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிசாரும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கூட்டமைப்பை தெரிவுசெய்து நிர்க்கதியாகிவிட்டோம் - கிளிநொச்சி மக்கள் ஆதங்கம்
ஆசிரியர் நியமனங்கள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியும் - இராஜாங்க கல்வி அமைச்சர் !
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...
|
|
|


