விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பம்!
Thursday, April 11th, 2019
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று(11) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்காக 8,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என, கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ...
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...
தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் மேலும் நீடிப்பு - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல்!
|
|
|


