விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்!

Monday, June 19th, 2017

மாகாண அமைச்சுக்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் வடக்கு மாகாண முதலமைச்சரும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும்பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக பிளவுபடும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இதனிடையே, வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் யாழ் ஆயர் ஜஸ்டின் ஞானபிரசகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதின முதல்வர் ஆகியோர் இன்று வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தனித்தனியே சந்தித்துள்ளனர்

முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவர்கள் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து சந்தித்தனர். அந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் சீ,வி விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ் ஆயரும், நல்லை ஆதின முதல்வரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:


செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை - இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்...
20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நாளை வரை சந்தர்ப்பம...
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!