உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஸ்ய அதிபர் புடினை இரகசிய இடத்தில் சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!

Sunday, March 6th, 2022

உக்ரைன் மீதான திடீர் திருப்பமாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மொஸ்கோவில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்து நாட்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கிய பின் புடினை சந்தித்த முதல் மேற்கத்தியத் தலைவர் பென்னட் ஆவார்.

முன்னதாக ரஷ்யா-உக்ரைன் போரைத் தீர்ப்பதற்கான முதல் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி திங்களன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் டேவிட் அராகாமியா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் தாக்குதல் குறித்து இரு நாடுகளுக்கிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வலுசேர்க்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் ரஷ்ய அதிபரை சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: