வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு தந்தை செல்வாபுரம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
Tuesday, September 20th, 2016
தற்போது தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தமக்கு பெற்றுத்தருமாறு கோரி ஈழமக்கள் ஜனநாய கட்சியிடம் தெல்லிப்பளை தந்தை செல்வாபுர மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரனிடமே (வி.கே.ஜெகன்) தமது கோரிக்கைகளை தந்தை செல்வாபுர மக்கள் முன்வைத்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது – தமது பகுதி மீள்குடியேற்றப்பட்ட பகுதியாக காணப்பட்டாலும் இதுவரை தமது வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கூட பூர்த்திசெய்யப்படாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். எமது பகுதிக்கு மின்னாரம், வீட்டுத்திட்டம், காணி இன்மை மற்றும் காணி உரிமம் இன்மை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாம் நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றோம்.
எமது வாழ்வியல் தேவை மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக மக்கள் மீதும் அவர்களது வாழ்வியல் மீதும் அதீத அக்கறைகொண்டு பணியாற்றிவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் எமது பிரச்சினைகளின் தீர்வுகளை எதிர்பார்த்து உங்களிடம் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் என தெரிவித்திருந்தனர். அத்துடன் தமது பகுதி இளைஞர்களது விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறும் கோரியிருந்தனர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட வி.கே.ஜெகன் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திரந்தார்.
இதன்போது வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) மற்றும் பவான் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|
|


