வாள்வெட்டு – இணுவிலில் கணவன் மனைவி படுகாயம்!

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மகனைத் தேடி வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
உடுவில் பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!
எதிர்வரும்14 ஆம் திகதி நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்!
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் பத்திரமாக மீட்பு!!
|
|