வாகன நெரிசலை தவிர்க்க வருகின்றது தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதம்!
Monday, July 11th, 2016
கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைப்பதற்கு தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக குறித்த தூணிலான பாதையை அமைப்பதற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மாத்திரம் 600 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் திட்டமானது ஜப்பானின் நிதியுதவியுடன்,பெருந்தெருக்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொழும்பு, பொரல, பம்பலப்பிட்டிய, நுகேகொட உள்ளிட்ட பிரதேசங்களை மையப்படுத்தி இந்தப் புகையிரத திட்டம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
“கைத்தொலைபேசிகளை ஒப்படையுங்கள்” - சிறைச்சாலைக்குள் சுவரொட்டிகள்!
ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது - அரசாங்கம் !
நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!
|
|
|


