ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது – அரசாங்கம் !

Saturday, June 22nd, 2019

சம்பள முரண்பாடு மற்றும் பதவியுயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்றிரவு ஆரம்பமான புகையிரத தொழிற்சங்கத்தினரின்ர் பணி புறக்கணிப்பு போராட்டம் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக இன்று காலைமுதல் வழமையான சேவையில் ஈடுப்படவிருந்த 45 புகையிரதசேவைகள் இரத்தாகியுள்ள நிலையில் , யாழ். தேவி வழமை போல் சேவையில் உள்ளது.

அதோடு ஒருசில புகையிரதங்களும், 09 அலுவலக புகையிரங்களும் வழமையான நேர அட்டவணைக்கு கீழ் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் புகையிரத பயணங்களுக்கு ஆசனங்களை பதவி செய்துள்ளவர்கள் ஆசன பதவி கட்டணங்கள் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலையகத்திற்கான புகையிரத சேவைகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நாளை மறுதினம் குறித்த பிரதேசங்களுக்கான புகையிர சேவைகள் வழமை போல் நடைமுறையில் இருக்கும்.

புகையிரத பணிப்புறக்கணிப்பினை தொடர்ந்து பயணிகள் எதிர்க் கொள்ளும் அசௌகரியங்கனை தவிர்ப்பதற்கு 800 இலங்கை போக்குவரத்து பஸ்கள் மேலதிக சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புகையிரத திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒருமித்த வகையிலே தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என கூறியுள்ள அரசாங்கம், அனைவரும ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வை வழங்க முடியுமே தவிர ஒரு தரப்பினரின் கோரிக்கைகளை மாத்திரம் நிறைவேற்ற முடியாது என கூறியுள்ளது.

Related posts: