வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு!

Sunday, November 19th, 2017

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நவம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் இருந்த இறக்குமதி தீர்வையின் பிரகாரம் விடுவித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

இத்தகைய வாகனங்களை அடுத்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சுங்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வது அவசியம் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு அப்பால் மின்வலுவில் இயங்கும் வாகனங்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் இறக்குமதி தீரவை சலுகை வழங்கப்பட்டது. இந்த சலுகையை ஒரு வருட காலத்திற்கு மேற்படாமல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பழைய மின்வலு மோட்டார் கார் இறக்குமதி மீது பத்து இலட்சம் ரூபா இறக்குமதி தீர்வை வழங்கப்படும். ஹைபிரிட் வாகனங்களுக்கான லீசிங் வசதிகள் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது 70க்கு 30 சதவீதமாக இருந்தால் போதுமானதென நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: