வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது!
Tuesday, April 12th, 2016
புத்தாண்டை முன்னிட்டு வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட சோதனை நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 6.00 மணி முதல் நேற்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் 126 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முச்சக்கர வண்டி சாரதிகள் 68 பேர் மற்றும் பாரவூர்தி சாரதிகள் 7 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
பேருந்து முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் வெற்றி - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச விருது!
முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் - இராஜாங்க அம...
|
|
|


