கைவிடப்பட்ட நிலையில் அரச திணைக்கள கட்டடங்கள் – அறிக்கை கோருகிறது திறைசேரி !

Wednesday, July 4th, 2018

வடக்கில் அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்படாத நிலையில் பல கட்டடங்கள் காணப்படுவதுடன் இது பற்றிய விபரங்கள் நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்ட கட்டடங்களை பட்டியல்படுத்தி உடன் அனுப்பி வைக்குமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சு கோரியுள்ளது.

இதுவரை பயன்படுத்தப்படாத அரச கட்டடங்கள் தொடர்பில் வடக்கு அமைச்சின் செயலாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

அரசாங்க நிறுவனங்களால் அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக பொது திறைசேரிக்கு தெரிய வந்துள்ளது. இக்கட்டடங்கள் ஏன் கைவிடப்பட்டுள்ளன? மேற்படி கட்டடங்களின் இன்றைய நிலவரம் குறித்த தகவலை விரிவாக அனுப்பி வைக்குமாறு திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.தேசப்பிரிய கேட்டுள்ளார்.

மேலும் உரிய திட்டமிடல்களின்றி அமைக்கப்பட்டமையாலேயே பெருமளவு நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: