வவுனியாவில் விபச்சாரத்தினால் எச்.ஐ.வி. தொற்று பரவுகிறது: பாலியல் நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி!

வவுனியாவில் விபச்சாரம் காரணமாக அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை எச்.ஐ.வி தொற்றினால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 13 பேர் மரணித்துள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பாலியல் நோய்த் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர்.
இந்த எச்.ஐ.வி. மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக பரவி வருகின்றது.
ஆனால் வவுனியாவைப் பொறுத்தவரை விபச்சாரம் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு வருகின்றது. இதனை இனங்காண ஒன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை. அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது எனத் தெரிவித்தார்.
Related posts:
|
|