வவுனியாவில் கோர விபத்து : 19 பேர் படுகாயம்!
Wednesday, July 25th, 2018
வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Related posts:
புனித ரம்ஜான் நோன்பு ஆரம்பம்!
கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை - கடற்படையின் ஊடகப் பேச்சாளர்!
ஜனாதிபதி- பிரதமரின் தலைமையில் தங்காலையில் இடம்பெற்ற டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம்!
|
|
|


