புனித ரம்ஜான் நோன்பு ஆரம்பம்!

Thursday, May 17th, 2018

முஸ்லிம் மக்களது புனித தினமான ரம்ஜான் நோன்பு வரும் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதனிடையே சவூதி அரேபியாவில் ரம்ஜான் நோன்பு மாதம் வியாழக்கிழமை (மே 17) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், “நிகழாண்டு ரம்ஜான் புனித மாதத்தின் முதல் நாள் மே 17′ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் புனித மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பதை, இஸ்லாமியர்கள் தங்களது 5 கடமைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர். ரம்ஜான் மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரையில் உண்ணா நோன்பு கடைப்பிடித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.

பிறை காணுதல் மற்றும் நிலவு நாள்காட்டி கணக்கீட்டின் அடிப்படையில் ரம்ஜான் புனித மாதம் தொடங்கும் நாள் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் சவூதி அரேபியா நிர்ணயிக்கும் தேதிகளையே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இதர நாடுகளும் பின்பற்றுகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் தங்களுக்கென தனி கணக்கீட்டின் அடிப்படையில் தேதியை நிர்ணயம் செய்துகொள்கின்றன. சவூதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் இரு முக்கிய புனிதத் தலங்களான மெக்கா, மதீனா ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: