100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023

டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன் மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய ஆலை உரிமையாளர்கள் நீண்டகாலமாக இவ்வாறான விலையேற்றத்தை செய்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: