வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!
Tuesday, December 14th, 2021
வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேருந்து சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 1ஆம் திகதிமுதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை பொலிஸாராலும், சம்பந்தப்பட்ட சுற்றிவளைப்புப் பிரிவினராலும் மேற்படி பஸ்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரான நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்துகள் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் நான்கு இளைஞர்கள் கைது!
நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை - ஒளித்தும் போகவில்லை - பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவ...
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|


