ஜப்பானின் அதிரடி முடிவு – இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது சீனா!

Friday, August 25th, 2023

அண்டை நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை நேற்றுமுதல் (24) கடலிற்குள் வெளியேற்ற தொடங்கியுள்ளது.

ஜப்பானின் இந்த நடவடிக்கையானது சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சீனா, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது.

கதிரியக்க நீரை கடலில் கலக்கின்ற முடிவானது ஜப்பானின் சுயநலமான மற்றும் பொறுப்பற்ற முடிவு என்று சீனாவின் வா்த்தகத்துறை அமைச்சின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமல்லாமல் தென் கொரியாவில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஜப்பானின் இந்த முடிவுக்கு அந்த நாட்டு அரசாங்கம் ஆதரவு வழங்கியிருப்பது அங்கு மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாகியிருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக புகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்து, அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிர்விக்கும் இயக்கம் நின்று போனது.

பின்னர், அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகி அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது.

அவை பெரிய தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலந்து குறித்த அனல்மின் நிலையத்தின் செயட்பாடுகளை முற்றாக நிறுத்துவதே ஜப்பானின் நோக்கம்.

இதற்கான முடிவுகளை ஜப்பான் அரசு மேற்கொண்டிருந்த நிலையில், அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறிய பின்னரே இந்த முடிவினை நடைமுறைப்படுத்த ஜப்பான் அரசு தீர்மானித்தது.

இந்நிலையில், கதிரியக்க நீரை நேற்று (24) முதல் ஜப்பான் கடலில் கலக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: