வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மை தீர்மானம்?-  வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!

Friday, June 8th, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய மகஜர் ஒன்று நகராட்சி மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு இன்றையதினம்  வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது –

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தவிசாளர் கருணானந்தராசாவின் பொறுப்பற்றதும் தன்னிச்சையானதுமான செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற சபையின் உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய பிரதிநிதிகளே இவ்வாறு நம்பிக்கையின்மை மகஜர் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்கள் தவிசாளராக தொடர்ந்தும் கருணானந்தராசா இருப்பதற்கு தகுதியற்றவர் என தெரிவித்து தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியே குறித்த நம்பிக்கையின்மை மகஜரை கையளித்துள்ளனர்.

தீருவில் பூங்கா அமைப்பு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக தவிசாளர் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்காது தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் நிதி வீண்விரயம் செய்வதாகவும் இதற்கு செயலாளரும் உடந்தையாக இருக்கின்றார் என்றும் அந்த மகஜரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: