பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டில் வழமையான நிலையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதற்காக நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் – எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை, மக்களின் உணர்வறிந்த அரசாங்கம் என்ற ரீதியில் நன்கு அறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தவுடன், அதன் நிவாரணத்தை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

ஊழிர்களின் நலன் கருதி பொதுப் போக்குவரத்து சேவையில் 5700 பேருந்துகள் - இலங்கை போக்குவரத்து சபை தெரிவி...
சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு - பன்முகக் கூட்டாண்மை பரிணாம வளர்ச்சி தொடர்பில...
விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதகரிக்க நடவடிக்கை - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப...

யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி ...
சைப்ரஸிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பா மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமச...